Thursday, August 9, 2007

இவர் காஞ்சிபுரம் விநாயகர்

வலைப்பக்கம் ஆரம்பித்தாகி விட்டது. முதன் முதலில் எதை பதிவிடுவது என்று மண்டையை குழப்பிக் கொண்டிருந்த போது விநாயகர் கைகொடுத்து விட்டார். விநாயகர் முழு முதற்கடவுள். முதலில் எந்தச் செயலை தொடங்கினாலும் அவரை சாட்சியாக வைத்துதான் இந்துக்கள் தொடங்குவார்கள். நம் கடவுளர்களில் விநாயகரைத்தான் தங்கள் விருப்பப்படி வரைந்தும், செதுக்கியும், கணிப்பொறியில் வடிவமைத்தும் மகிழ்கிறார்கள். நான் விநாயக பெருமானின் திருவுருவை பதிவிட முடிவு செய்ததும் அத்திருவுருவம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி தேடி அலைந்தபோது நான் சேகரித்து வைத்திருந்த போட்டோ ஆல்பத்தில் இந்த விநாயகர் கிடைத்தார்.

இந்த பதிவில் உங்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகரை கடந்த ஜனவரி மாதம் என் டிஜிட்டல் கேமராவில் சிறை பிடித்தேன். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தவர் இப்போது என் புதிய வலைப்பதிவை துவக்கி வைக்க வந்துள்ளார். இனி என் வலைப்பக்கத்தை பார்க்க வருபவர்களுக்கு மட்டுமே அருள்பாலிக்க வேண்டும் என ஒரு விண்ணப்பம் வைக்கலாம் என்று இருக்கிறேன்
.